பாகற்காய் பிட்லை

0
1413

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 200 கிராம்

புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு

துவரம்பருப்பு – 100 கிராம்

கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

Bitter gourd Pitlai
Bitter gourd Pitlai

செய்முறை:

 

  • துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும்.
  • கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும்.
  • பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால். பாகற்காய் பிட்லை தயார்.

நன்மைகள்: 

  • பாகற்காயில் அதிக கசப்பு தன்மை கொண்டது. பாகற்காய் இது உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.
  • நீரிழிவு நோயிகளுக்கு பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நோயை முற்றிலும் குணமாக்கலாம் என கூறப்படுகிறது.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க