நீச்சல்

0
2155

நீச்சல் என்பது பண்டையக் காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில், நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும், நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

நீச்சல் பயிற்சி கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.  நகர்புறத்து இளைஞர்கள் நிறைய பேருக்கு நீச்சல் தெரியாது என்பது மறுக்க இயலாத உண்மை. கிராமத்து இளைஞர்கள் நீச்சல் கற்கக் காரணம் அவர்கள் ஊரில் கிணறு, வாய்க்கால், ஏரி அல்லது ஆறு இருக்கும். இதனால் இவர்களுக்கு நீச்சல் கற்கும் வாய்ப்பு தானாக வருகிறது. நகர்புறங்களில் நீச்சல் குளம் மூலமாக நீச்சல் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் நீச்சல் குளம் மூலமாக மேல்தட்டு மக்கள் மட்டுமே பயிற்சி கொள்ளும் அளவிற்கு மிகுந்த பொருட்செலவு ஆவதால் அதுவும் உகந்தந்தாக இருப்பதில்லை. நீச்சல் பயிற்சி வெளிஉறுப்புகள்  மட்டுமின்றி  உள்ளுறுப்புகளையும் பலம் அடையச் செய்கிறது.

Swimming

நீச்சல் கற்பது எப்படி?

கிணற்று நீச்சல் : நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைக்கால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார். இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும்.

 நிரப்பி நடுவில் உட்கார்ந்துக் கொண்டு காலை மட்டும் அசைக்கலாம். (பஞ்சர் உள்ள ட்யுப் ஆபத்தானது பயன்படுத்தக்  கூடாது).

 நன்கு நீச்சல் அறிந்தவர் உதவியுடன் ஓரிரு  நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு
இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி,  கை, கால்களை அசைக்கும் போது நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறைப்  பிடித்துக்கொள்ள கையையும் காலையும் ஒன்றாக அசைக்க வேண்டும். 

ஓரிரு  முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிக்கும் போது நல்ல பழக்கம் ஏற்படும். கிணற்றில் பழகும் போது இந்தப்பக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் நீச்சல் அடித்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வாரத்தில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம். இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஆற்று நீச்சல்: ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர். இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்தவர்களுடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளையும் ஒவ்வொன்றாக முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரவேண்டும். அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்புறம் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும்  எளிதாக தப்பிக்கலாம்.

 

நீச்சல் பயிற்சிக்கு பொருத்தமான இடம்:  நீச்சல் பயிற்சி ஆற்றிலோ அல்லது கிணற்றிலோ மேற்கொள்ளும்போது நீர் மற்றும் சுற்றுப்புறம் 

Swimming

தூய்மையானதாக இருப்பது நலம். நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது நீச்சல் குளம் சரியாக பராமரிக்கபடுகிறதா என்பதை கவனிக்கவேண்டும்.

கலோரி கணக்கீடு–சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் எரிக்கபடும் கலோரிகள்:

  • நீச்சல் சுற்றுக்களை, / ப்ரீஸ்டைல், வேகமாக, தீவிரமான முயற்சி மேற்கொள்ளும் போது ஆ= 862 kcal , பெ= 739 kcal எரிக்கப்படும்.
  • நீச்சல் சுற்றுக்களை, / ப்ரீஸ்டைல், மிதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது ஆ=603 kcal, பெ= 518 kcal எரிக்கப்படும்.
Swim

நன்மைகள்:

  • முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைக் குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது.
  • இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாகக் குறையும்.
  • நீச்சலின்போது நீரானது உடலுக்கு தேவையான இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.
  • உடலின் உள் உறுப்புகளுக்கும் , நரம்புகளுக்கும்  தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
  • மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைகிறது.
  • உடலின்  இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
  • கை, கால், தொடைப் பகுதித் தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.
  • தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.
  • கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குகிறது.
  • செரிமான சக்தியைத் தூண்டுகிறது. அஜீரணக் கோளாறைப் போக்குகிறது. நன்கு பசியைத் தூண்டச் செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்குகிறது.
  • மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் அருமருந்தாகும். 
  • நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
  • நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
  • சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
  • ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க