சுண்டைக்காய் குழம்பு

0
1753

தேவையான பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய்,சின்ன வெங்காயம் – தலா ஒரு கப்

தேங்காய் துண்டுகள் – 2

பூண்டு – 2 பல்

கீறிய பச்சை மிளகாய் – 1

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

குழம்பு பொடி – 2 டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா

அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

Solanum torvum curry
Solanum torvum curry

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து. வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி (காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்), சுண்டைக்காய் வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

நன்மைகள்:

  • சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து

சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். 

  • சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
  • இருமல் நீங்கும் –  சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
  • சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க