உனக்காக நானடி…

0
1897

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன… இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்… நினைக்கும் போதே சுளீர் என வலித்தது….

அவனோ உலகையே தன் கரங்களால் வென்றுவிட்டது போல் ஆனந்தத்திலும் ஆண்மைக்கான கம்பீரத்துடனும் கருமமே கண்ணாக ஐயர் கூறும் மந்திரத்தை கூறிக்கொண்டிருந்தான்.

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்! இவன் விரும்பியதெற்கெல்லாம் எதுவும் பேசாமல் தலையாட்ட நான் என்ன பொம்மையா? அர்ஜுன் இருக்கு உனக்கு கச்சேரி! எனக்கும் என் காதலுக்கும் பதில் சொல்லாமல் இந்த வாழ்க்கை நீ நினைப்பது போல அமையப்போறதும் இல்லை! உன்னை நான் அவ்வளவு சீக்கிரத்துல மன்னிக்கப்போறதும் இல்ல என தனக்குள் சபதமெடுத்துக் கொண்டிருந்தாள் மணப்பெண்ணான பவித்ரா!

“என்னடி யோசிச்சிட்டு இருக்க கல்யாணப் பொண்ணுக்கான எந்தவித கலகலப்பையும் காணோம்! அண்ணாவ பாரு வைச்சகண் எடுக்காம உன்னையே பார்த்துக்கொண்டிருக்கார்.கொஞ்சம் சிரியேன்பா உம்முன்னு இருக்க பார்க்க சகிக்கல!”
பவித்ராவிடம் அவள் தோழி நித்யா கூற மென்மையாக புன்னகைக்க மணக்கோலத்தில் தேவதையாய் ஜொலித்தாள்.

“என்ன டார்லிங் ரொம்பவே கோவமோ? மாமா மேல கொலைவெறில இருக்கிறது போல தெரியுதே!” கேலியாக அர்ஜுன் பவித்ராவிடம் இரகசியம் பேச அவளோ பதில் பேசாமல் அமைதியாய் இருந்தாள்!

ஆழ்கடல் அமைதியாக இருப்பதே கொந்தளிக்கத்தானோ? அர்ஜுன் நீ ரொம்ப பாவம்டா! பவியே எப்படி சாமாளிக்கப் போறியோ தெரியல!விதி விட்ட வழி என அர்ஜுன் தனக்குள் நொந்து கொண்டிருக்கும் போதே ஐயர் மந்திரம் கூற சுபமுகுர்த்தத்தில் மங்கல நாணை பெருமிதத்துடன் அணிவித்து தன்னவளை தன் உரிமையாக்கிக் கொண்டான்.திருமண சடங்கு இனிதே நடந்து முடிந்தது.

“என்னடி எப்போ பாரு விண்வெளிக்கு ராக்கேட் விடப்போறது போல யோசிச்சிகிட்டே இருக்க!பவி எவ்வளவோ கஷ்டங்ளுக்கு பிறகு அண்ணா எங்கள் ஆன்டிய சாமாளிச்சி இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கார்!இடையில ஏதோ போறாத காலம் பிரிஞ்சி இருக்க வேண்டியதாயிற்று! அதெல்லாம் மறந்துட்டு ஒழுங்கா குடும்பம் நடத்துற வேலைய பாரு! நீ உயிருக்குயிராக லவ் பண்ண உன் அர்ஜுனே வாழ்க்கைத் துணையாக கிடைச்சிருக்கார்! லவ் பண்ற எல்லாருக்கும் இந்த அதிஷ்டம் கிடைக்கிறதில்லப்பா!சரி சரி முறைக்காத! உன் கோபம் நியாயமானது புரியுது ஆனால் சண்டை பிடிக்குறத்துக்கான சந்தர்ப்பம் இது இல்ல!அண்ணாவே உன்னை விட்டு பிரிஞ்சதுக்கு ஏதாவது பெரிய காரணம் இருக்கும்! அதனால தான் என்னவோ உன்கிட்ட சொல்லாமல் இருப்பார்.”

“என்னடி நீ என் பிரண்டா அர்ஜுன் பிரண்டா? ஓவரா சபோர்ட் பண்ற! ஏதும் கமிஷன் வாங்கிட்டியோனு” சந்தேகத்துடன் நித்யாவிடம் பவித்ரா கேலியாக கேட்டாள்.

“எங்க நாம நல்லது சொன்னால் கேக்குறாங்க! என்னைவிட அண்ணாவ பற்றி உனக்கு தான் நல்லா தெரியும்! உனக்கு தேவையான காரணத்தை அண்ணாட்ட நீயே கேட்டுகோ! உன் மன்னவன் உனக்காக ரொம்ப நேரம் காத்துகொண்டிருக்கார். ஆண்டி வேற அடிக்கடி கேட்டுட்டே இருக்காங்க! இந்தா பால்! நீ சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பி!” என வாழ்த்தி அறைக்குள் அனுப்பி வைத்தாள் நித்யா!

“அவனுக்கு பால் ஒன்னு தான் ரொம்ப முக்கியம்! என முனுமுனுத்தபடியே கதவைத் லாக் பண்ணிவிட்டு வந்து கொண்டிருந்த பவித்ராவை பின்னாளிருந்தது அர்ஜுன் அணைக்க ரௌத்திரமானாள் பவித்ரா! அவன் கரங்களை தட்டிவிட்டு அர்ஜுன்! திஸ் இஸ் யுவர் லிமிட்! தாலிகட்டிட்டா எல்லாம் சரியாகிட்டா? என்னால எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது! நாம ஊருக்கு தான் கணவன் மனைவி! இங்கே நான் யாரோ..! நீங்க யாரோ.. தான்! என ஆத்திரத்துடன் கூறிவிட்டு கட்டிலின் ஓரமாய் கண்மூடி படுத்துக்கொண்டாள் ‘ஐ எம் சாரி அர்ஜுன் என்னை விட்டு போனப்போ செத்துடனும் போல இருந்தது. இப்ப எனக்கானவன் நீ..அப்படி இருந்தும் ஏன் என்னை அழவிட்டு பாதில காணமல் போன நீ! என்கிட்ட இருந்து எதை நீ மறைக்க டீரை பண்ற!என மௌனமாய் கண்ணீர் விட்டாள்!”

அர்ஜுனுக்கு வலித்தது! நான் ஏன் உன்னை விட்டு போனேன்னு சொன்னால் தாங்கமாட்டடி நீ! உன்னை விட்டு போய் நான் மட்டும் ஹாப்பியாவா குட்டிமா இருந்தேன். என கலங்கிவிட்டு கட்டிலின் மறுமுனையில் படுத்துக் கொண்டான்!

ஒரு மாதகாலமும் ஓடிவிட்டது. அர்ஜுனுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாள்!ஆனால் அவனிடம் விலகியே இருந்தாள் பவித்ரா! அர்ஜுனால் தாங்க முடியவில்லை! அவன் சமாதானங்கள் யாவும் தோல்வியில் முடிய ஒரு முடிவெடுத்தான். புரியாத சில விடயங்ளை தனிமை புரிய வைக்கும் என நினைத்தான். அதற்கான சந்தர்ப்பத்தை அவன் ஆபிஸ் வேலையும் அமைத்துக்கொடுக்க மூன்று வாரம் பவித்ராவை பிரிந்து வெளியூர் சென்றான்.

அர்ஜுனுடன் முன் போல் சகஜமாக பேசாவிட்டாலும் தன்னவன் தன் அருகில் இருப்பதையே பவித்ரா விரும்பினாள். அந்த சிறு பிரிவைக்கூட அவளால் தாங்கமுடியவில்லை. அர்ஜுனை பற்றியே அவள் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது! முன்னைய ஞாபகங்ள் கண்முன்னே தோன்றி மறைந்தன.

மூன்று வருடங்கள் முன்பு ஒரே ஆபிஸில் ஒன்றாக பணிபுரிந்த போது ஏற்பட்ட சிநேகம் அர்ஜுன் பணிபுரிவதற்காக ஆன்சைட் போனபோது இணையம் வழியே காதலாய் மலர்ந்தது! அர்ஜுனே மிகவும் நேர்மையாக தன்காதலை சொன்னான். தனக்கு ஹார்ட்டில் இருக்கும் சிறு பிரச்சினை உட்பட கூறினான் பவித்ராவை கட்டாயப்படுத்தவில்லை! அர்ஜுனின் மேல் கொண்ட பிரியமும் அவனின் நேர்மையும் அவனது ரசனைகளும் பிடித்துவிட அவனின் பிரச்சினை முன்னர் தெரிந்து இருந்ததாலும் மனப்பூர்மாக அவன் காதலை ஏற்றுக்கொண்டாள்! அவர்கள் இருவருக்குள்ளும் சிறு மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் கூட வந்ததில்லை!

டேய் உன்னைப் போல யாராலையும் என்னை லவ் பண்ண முடியாது!நீ எப்போதும் புரியாதபுதிர் தான்! நான். பீவர்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனப்போ எனக்காக லீவு போட்டுவந்தாய்..! லவர்ஸ்டே பற்றி முன்னைய நாள் எவ்வளவு எல்லாம் கமன்ட் பண்ணிட்டு மோர்னிங் கிப்டோட வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பாய்!நான் என்னை பற்றி தெரிஞ்சி வைச்சிருக்கேனோ தெரியல! ஆனால்  என் ஒவ்வொரு அசைவையும் புரிந்து வைத்தவன் உன்னையன்றி யாருமில்லை!இரண்டு வருடமாக நல்லா தானே நம்ம லைப் போய்க்கொண்டிருந்தது.

தீடீர்னு என்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிச்ச! சரியாக பேசுவது கூட இல்ல! ஏன்னு உன்கூட சண்டை போட்டு அழுதப்போ நீ எனக்காக அழுதாய்.. தாங்கமுடியலடா!இனி எல்லாம் சரியாகிடும்னு இருக்கும் போது ஒரு வாரமாக ஒரு மெசர்ஜ் கூட இல்ல! உன்னை காண்டெக் பண்ணவும் முடியலை.. தீடீர்னு ஒரு மெசர்ஜ் ‘உனக்கும் எனக்கும் இனி ஒத்து வராது! உனக்கான நல்ல லைப்யை அமைத்துதக் கொள்.. விதி எதுவோ அது நடக்கட்டும்..! என மெசர்ஜ் பண்ணிட்டு ஒரு வருடமாக காணாமல் என்னை விட்டு போய்விட்டாய்..! இப்போ நீ சொன்ன விதி சேர்த்து வைச்சிருக்கு.. ஆனால் நீயாக காரணம் சொல்லும் வரை என்னால உன்னை முழுசாக ஏத்துக்க முடியலை.. உன்னை எனக்கு தெரியும் ஏதோ ஒன்ன மறைக்கிறாய். அதுவும் எனக்காக தான் இருக்கும்னு தோணுது..

என்றெண்ணி கண்கலங்கியவாறே திருமண ஆல்பத்தை எடுப்பதற்காக காபோர்ட்டை திறந்து அதை தேடிக் கொண்டிருக்போது சில மெடிகல் ரிபோர்ட்டும் அர்ஜுனின் டயரியும் பவித்ராவின் கண்ணில் பட்டது.

அதை எடுத்து பார்த்தவளுக்கு இதயம் கணத்து கண்ணீர் சொட்டியது. அர்ஜுனிற்கு ஹார்ட்டில் மேஜர் ஆப்பரேசன் ஆறு மாதங்களுக்கு முன்னர் செய்யப்பட்டிருப்பதை அது தெளிவாக காட்டியது! அவளால் தாங்கமுடியவில்லை. உன்னை எவ்வளவு காயப்படுத்திவிட்டேன் அர்ஜு! என்று கண்ணீர் சிந்தியவாறு அர்ஜுனின் டயரியை வாசிக்க ஆரம்பித்தாள்!

பவி நீ எனக்கு கிடைத்தது என் அதிஷ்டம்! என் பிராப்ளம் தெரிஞ்சும் என்னை மனப்பூர்வமாய் காதல் செய்தாய்!நானும் நினைத்தேன் எனக்கு இருக்கிறது மைனர் பிராப்ளம்னு! என் ஆயுள் இவ்வளவு கம்மியானு தோனுது..எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆப்ரேசன் செய்யனுமாம்! அப்படி செய்து சக்சஸ் ஆகும் சான்ஸ் ரொம்ம கம்மியாம் டாக்டர் சொல்றாங்க.. காதல் என்ற பெயர்ல உன் வாழ்க்கையை பணயம் வைத்துவிட்டேனோனு குற்றஉணர்ச்சி என்னை கொல்லுதுடி.. நீ சந்தோசமாக இருக்கனும்.உன்னை விட்டு கொடுக்கவும் முடியாமல் விலகி நிற்கவும் முடியாமல் நரக வாழ்க்கை தான் வாழ்கிறேன்.உனக்காக வாழனும் என்ற ஆசையில் ஆப்பரேசன் பண்ண போறன்டி கடைசி முயற்ச்சியாக..நம் காதலுக்கு சக்தி இருந்தால் அது நம்மல சேர்த்து வைக்கும் என்று நம்புகிறேன். அதனால் தான் நீ சுமக்கும் அதே வலியோடு உன்னை விட்டு விலகுறேன்..!

அர்ஜுனின் ஆழமான காதல் புரிந்தவுடன் கதறி அழுது கொண்டிருக்கும் பொழுது பவித்ராவை பிரிந்திருக்க முடியாமல் பணியை இடை நிறுத்தி வந்தவனுக்கு பவி அழுவதை காணமுடியாமல் அவளை தேற்றும் வழி தெரியாது அணைத்தான். அவன் அணைபினுள் தஞ்சமடைந்த பெண்ணவள் அர்ஜு என்னை மன்னிச்சிடுங்க.. உங்க நிலமை தெரியாமல் உங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன். உங்களுக்கு இப்போ ஒன்னுமில்லையே நீங்க இல்லன்னா என்னால தாங்கமுடியாது!ஏன் அர்ஜு என்கிட்ட சொல்ல என கண்ணீர் மல்க கூறி அவன் மார்பில் சரணடைந்தாள்.

பவி நான் இதெல்லாம் சொன்னால் நீ இப்படி உடைந்து போய்டுவன்னு தான் உன்கிட்ட சொல்லாமல் மறைச்சிட்டேன்.குட்டிமா நீ அழுவுறது தாங்கமுடியலடி! உனக்காகவே நானடி.. பின்ன எப்படி உன்னை காயப்படுத்துவேன்.. ஆசை பொங்கும் காதலுடன் கூறி அவளிடம் தஞ்சமடைந்தான்.

இது என் முதல் சிறுகதை. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இதில் தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்கவும். கதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதிவிட்டேன்..!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க