அக்கினிப் பறவை..!

0
1108

வாழ்கையெனும் மாயநதி
வனிதையவள் பயணிக்கிறாள்
வழிநெடுகிலே நஞ்சினை கக்க
வரிசையாய் வக்கிரம் பிடித்தோர்
வரையறை மீறாமல்
வழிமுறை தவறாமல்
வாழமுனைகையில் வஞ்சனைக்கு
வடிகால் தேடும் வன்மம்
வன்முறை எனும் பெயரிலே
வதைக்கப்படுகிறாள் சந்தியிலே..
சல்லடையாக்கப்பட்டவளோ
சாக்கடையிலே வீசப்படுகிறாள்..
சதிகார சபல புத்திகாரனை
சட்டமதுவும் சாகடிக்காமல்
சலசலப்பு அடங்கியதும்
சாலையில் நடமாடவிடுகிறது…
சற்றுகாலம் சமூகமதுவும் தூற்றிவிட்டு
சட்டடென மறந்தும் விடுகிறது
சாரல் கீற்று சாய்க்கப்பட்டதினையே..
வேரருக்கப்பட்டவள் வீழ்ந்தாள்
வேலி தகர்த்து எழுந்தாளா..?
வேதனையால் மடிந்தாளா..?
வேறுவிதமாய் சிந்திப்பவர் எவருமில்லை..
வேங்கையாய் சீற்றம் கொண்டு
வேகமாய் நம்மை நாமே
வீரியத்துடன் தேற்றிக்கொண்டு
விருட்சகமாய் எழவேண்டும்..
வீதியில் நடமாடும் செந்நாய் அவன்
வீரமங்கை உன்னை கண்டு
அஞ்சி தெறித்து தூர ஓடவேண்டும்
அக்கினி பறவையாய் பெண்னவள்
அகிலத்தில் வலம் வர துணிந்தால்
அடிமையாக்க என்னும்
ஆணவம் கொண்ட ஆணாதிக்கமும்
அடியோடு அழியும்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க