வஜ்ராசனம்

0
163

செய்முறை: 

வஜ்ராசனம் செய்முறை: தரைவிரிப்பில் அமர்ந்து இருகால்களின் மூட்டுக்களையும் தரையில் அழுத்தமாக பதியும்படி செய்து இருகால்களையும் உட்புறமாக மடக்க வேண்டும்.

முதுகுக்கு பின்புறம் இரு உள்ளங்கால்களும் மேல்நோக்கி இருக்கும், இந்நிலையில் குதிங்கால் மீது ப்ருஷ்ட பாகத்தை வைத்து உட்கார வேண்டும்.

இரு உள்ளங் கைகளும் இருமூட்டுகள் மீது இருக்க வேண்டும். சுவாசத்தை நன்றாக இழுத்து பின் வெளியிட வேண்டும். இதுவே வஜ்ராசனம் ஆகும்.

மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள்

உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.

ஆன்மீக பலன்கள்: மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.

பயன்பெறும் உறுப்புகள்: மன உறுதி உண்டாகும் பாதம், கணுக்கால், தசைகள், தொடைகள், இடுப்பு ஆகிய உறுப்புகள் பலம்பெறும்.உடலில் கெட்ட நீர் தேக்கம் குறையும்.ஜீரண சக்தி அதிகரிக்கும்.

Vajrasanam

இங்கே கருத்துக்களை பதிவிடவும்

avatar
  இங்கே பதிவு செய்க  
என் கருத்துக்கு