லட்டு (Laddu)

0
157

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 200 கிராம்

சர்க்கரை – 350 கிராம்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

முந்திரி, திராட்சை – தலா 20

லவங்கம் – 8

டைமண்ட் கல்கண்டு – 15

பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை

முழு ஏலக்காய் – 5

பால் – ஒரு டீஸ்பூன்

கேசரி கலர் – சிறிதளவு

Laddu
Laddu

செய்முறை:

  • சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும்.
  • கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாகக் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்துப் பாகில் சேர்க்கவும்.
  • முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு – பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும்.
  • கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

நன்மைகள்: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்புப் பலகாரம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை உண்பதைத் தவிர்க்கவும்.

இங்கே கருத்துக்களை பதிவிடவும்

avatar
  இங்கே பதிவு செய்க  
என் கருத்துக்கு